நாமக்கல்: ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 50 லட்சத்தை கணவர் இழந்ததால் இரு குழந்தைகளுடன் பெண் தற்கொலை செய்த விவகாரத்தில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. மோகனப்பிரியா (33), பிரனிதி (6), பிரனீஷ் (11 மாதம்) ஆகியோர் உயிரிழந்தனர், குழந்தைகளின் தந்தை பிரேம்ராஜ் மாயமானார். போலீஸ் விசாரணையில், பணத்தை இழந்ததை வெளியில் சொல்வது அவமானம், எனக்கு தைரியம் இல்லை என பிரேம்ராஜ் கடிதம் எழுதியது தெரியவந்தது. தொடர்ந்து அவரை போலீஸ் தேடுகிறது.