நீர் நிலைகள் தூர் வாரும் பணி தொடங்கி வைப்பு

62பார்த்தது
நீர் நிலைகள் தூர் வாரும் பணி தொடங்கி வைப்பு
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர் எல்லை பிடாரி அம்மன் கோயில் குளத்திலிருந்து சார் பதிவாளர் அலுவலகம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரும் பணிக்காக சுமார் 9. 5 லட்சம் ரூபாய் டெண்டர் விடப்பட்டு பூஜை நடைபெற்று தூர்வாரும் பணி ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியை நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். மேலும் நகராட்சி கணக்கர் செந்தில் குமார், நகரமன்ற உறுப்பினர்கள் ஆனந்தராஜ், ஸ்ரீதர், திமுக நிர்வாகிகள் சாமிநாதன், ராஜா, கதிரேசன், ராஜாராம் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி