தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் இன்று நெய்வேலி அடுத்த வெங்கடாம்பேட்டை கிராமத்தில் மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
உடன் பாட்டாளி மக்கள் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் பாமகவினர் கலந்து கொண்டனர்.