கடலூர் மாவட்டம் வடலூர் ஆபத்தாரணபுரம் அம்பேத்கர் நகரை சேர்ந்த கண்ணதாசன் இவரது நண்பர் குப்புசாமி இருவரும் நேற்று முன்தினம் சென்னை கும்பகோணம் சாலையில் வடலூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது எதிரே வந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதியது. அதில் படுகாயமடைந்த கண்ணதாசன் மற்றும் குப்புசாமி ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து வடலூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.