உளுந்தூர்பேட்டையில் நடைபெறும் மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் குறிஞ்சிப்பாடி ஒன்றியம் மற்றும் வடலூர் நகர செயற்குழு கூட்டம் கடலூர் மைய மாவட்ட செயலாளர் பாரா. நீதிவள்ளல் தலைமையில் வடலூரில் இன்று(செப்.27) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கடலூர் மாநகராட்சி துணை மேயர் பா. தாமரைச்செல்வன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.