கடலூர் - விருத்தாசலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் குறிஞ்சிப்பாடி அண்ணாநகர் அருகே உள்ள செங்கால் ஓடையில் மழைநீர் பல இடங்களில் குட்டை குட்டையான தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதியில் எந்த நேரத்திலும் விபத்து ஏற்படும் அபாயம் மற்றும் பாலத்தின் தன்மை குறைய வாய்ப்புள்ளதாக மழைநீர் தேங்கி நிற்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.