கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ரயிலடி நான்கு முனை சந்தித்து பகுதி அருகே குறிஞ்சிப்பாடி ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையம் தற்போது புதுப்பொலிவுடன் வண்ணம் தீட்டப்பட்டுள்ளதால், ரயில்வே பயணிகள் மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனை தங்களுடைய தொலைபேசியில் புகைப்படம் எடுத்துக்கொண்டு செல்கின்றனர்.