கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் உள்ள நந்தவனத்தெருவில் குண்டும் குழியுமாக சாலை இருந்ததால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நிறைவு பெற்று பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.