குறிஞ்சிப்பாடியில் இலவச மனை கேட்டு செங்கொடி பேரணி

54பார்த்தது
இலவச வீட்டு மனை பட்டா, இலவச மனை கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தை நோக்கிப் பிரம்மாண்டமான செங்கொடி பேரணி ஒன்றிய செயலாளர் எம்பி தண்டபாணி தலைமையில் நடைபெற்றது‌.

அப்போது குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தார் அசோகனை மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி. ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் எம்பி தண்டபாணி, மாவட்ட குழு உறுப்பினர்கள் எஸ்எஸ் ராஜ், ஆர். சிவகாமி, ஆர்.கே சரவணன் ஆகியோர் சந்தித்து 860 மனுக்களை வழங்கினர். ஒன்றிய குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள், வெகுஜன அரங்க நிர்வாகிகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி