கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டை பகுதியில் காட்டுமன்னார்கோவில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் பின்புறம் வைத்து கஞ்சா விற்பனை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த முகமது பாரிஸ் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்த 15 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.