செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூரில் இருந்து மதுராந்தகம் நோக்கி சந்தோஷ் (30) மற்றும் கார்த்திக் (29) ஆகிய இருவரும், நேற்று (டிச.26) இரவு 7 மணியளவில் மாருதி ஷிப்ட் காரில் சென்று கொண்டிருந்தனர். சந்தோஷ் காரை ஓட்டிச் சென்ற நிலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதியது. இதில், சந்தோஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே கார்த்திக் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.