சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

63பார்த்தது
சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் காந்தி சிலை அருகில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் எம். ஜெயசித்ரா தலைமை தாங்கினார். கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர்
ஏ. செல்லையா முன்னிலை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் பழ. வாஞ்சிநாதன் சிதம்பரம் நகர செயலாளர் எஸ். ராஜா, நகர் மன்ற துணைத் தலைவர் எம். முத்துக்குமரன், மதர் சங்க மாவட்ட தலைவர் மல்லிகா ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாநில சிறுபான்மை நல குழு துணை தலைவர் தோழர் மூசா நிறைவுறை ஆற்றினார்.

தொடர்புடைய செய்தி