கடலூர் மாவட்டம் கிள்ளை அடுத்த பின்னத்தூர் அபிராமி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர் இவர் வளர்த்து வந்த 2 பன்றிகளை, புவனகிரி சாத்தமங்கலம் நகராமலை பகுதியை சேர்ந்த திருமூர்த்தி, கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆசனுார் எம். ஜி. ஆர் நகரை சேர்ந்த முருகன் ஆகியோர் மோட்டார் பைக்கில் வைத்து கட்டி திருடிச் சென்றனர். இது குறித்து சங்கர் கொடுத்த புகாரின் பேரில் கிள்ளை சப் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்கு பதிந்து திருமூர்த்தி, முருகன் ஆகிய இருவரை கைது செய்து 2 பன்றிகளை பறிமுதல் செய்தார்.