கடலூர்: வெற்றி பெற்ற மாணவிக்கு கிராம மக்கள் வரவேற்பு

53பார்த்தது
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வாழைக் கொல்லை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கலைச்செல்வன்-மாலதி தம்பதியரின் மகள் கதிர் செல்வி (27) இவர் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று தமிழகத்தில் முதலிடம் பிடித்துள்ளார். இந்த நிலையில் கிராமத்திற்கு வருகை தந்த அவருக்கு கிராம மக்கள் ஆர்த்தி எடுத்து சால்வை, மாலை அணிவித்து மேல தாளத்தோடு உற்சாகமாக வரவேற்பளித்தனர். வெற்றி பெற்றது குறித்து கதிர்ச்செல்வி தெரிவிக்கும்போது விடாமுயற்சியோடு கடினமாக உழைத்தால் வெற்றி பெறலாம். இது வார்த்தைக்காக அல்ல செயல்படுத்தி பார்த்து விட்டு சொல்கிறேன் என பெருமிதத்தோடு தெரிவித்தார். இவர் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் கல்வி பயின்றார். பின்னர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண்மை பட்டப் படிப்பை முடித்தார். இதன் பின்னர் கடந்த 2023 ஆம் ஆண்டு குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்று அதில் கிடைத்த பணிக்கு செல்லாமல், தொடர்ந்து குரூப்-1 தேர்வினை கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் எழுதினார். அதன் முடிவுகள் சில தினங்களுக்கு முன்பு வெளியானது அதில் மாநிலத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். இவருக்கு கிராம மக்கள் மட்டுமல்லாது, சமூக வலைதளங்கள் பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட பல்வேறு தளங்களிலும் பாராட்டுகளும், வாழ்த்து மழைகளும் குவிந்து வருகின்றன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி