மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரம் செல்லும் பயணிகள் ரெயில் வழக்கமாக 6. 50 மணிக்கு கடலூர் மாவட்டம் சிதம்பரம் ரெயில் நிலையத்துக்கு வந்து சேரும். பின்னர் 2 நிமிடம் நின்றுவிட்டு மீண்டும் புறப்பட்டு செல்லும். ஆனால், நேற்று இந்த ரெயில் 25 நிமிடம் தாமதமாக 7. 15 மணிக்கு சிதம்பரத்திற்கு வந்தது. அப்போது 2 நிமிடத்திற்கு மேல் ஆகியும் சிக்னல் கிடைக்காததால் ரெயில் புறப்படாமல் சிதம்பரத்திலேயே நின்றது. இது பற்றி அறிந்து வந்த ரெயில்வே போலீசார் மற்றும் அதிகாரிகள் சிக்னல் கோளாறை சரி செய்தனர். இதனால் சுமார் 1 மணி நேரம் தாமதமாக 8. 15 மணிக்கு ரெயில் மீண்டும் விழுப்புரம் நோக்கி புறப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.