தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் ஒரு வார காலம் மனிதநேய வார விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கடலூர் மாவட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மனிதநேய வார நிறைவு விழா நடைபெற்றது. இந்த விழாவில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ கலந்து கொண்டு சிறப்பித்தார். உடன் சிதம்பரம் சார் ஆட்சியர், கடலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், மாவட்ட மேலாளர் தாட்கோ,
சிதம்பரம் வட்டாட்சியர், தலைமையாசிரியர்கள்,
ஆசிரிய பெருமக்கள் உள்ளிட்டோர் ஏராளமாக கலந்து கொண்டு மனிதநேய வார விழாவில் உறுதிமொழி ஏற்று சிறப்பித்தனர்.