உங்கள் வாகனத்தின் RC புக் காலாவதியாகி விட்டால் Parivahan Sewa இணையத்தில் புதுப்பிக்கலாம். அதில், Online Servicesஐ தேர்ந்தெடுத்து Vehicle Related Services கிளிக் செய்யவும். பின்னர், தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்து Renewal of Registrationஐ தேர்வு செய்யவும். அதில், வாகனத்தின் தகவல்களை பதிவிட்டு, கட்டணத் தொகையைக் கட்டினால், புதுப்பிக்கப்பட்ட RC புக் கிடைக்கும். காலாவதியான 60 நாள்களில் இதனை செய்து முடிக்க வேண்டும்.