அத்தியாநல்லூர்: குட்கா கடத்திய 2 பேர் கைது

50பார்த்தது
அத்தியாநல்லூர்: குட்கா கடத்திய 2 பேர் கைது
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே புதுச்சத்திரம் காவல் துறையினர் அத்தியாநல்லூர் டோல் கேட் அருகே நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது சிதம்பரத்திலிருந்து கடலூர் நோக்கி வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்கள் கடத்தி சென்றது தெரிந்தது. இது குறித்து புதுச்சத்திரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சிதம்பரம் மெய்க்காவல் தெருவை சேர்ந்த பிரபாகரன், செங்காட்டு தெரு நடராஜன் மகன் ராமநாதன், இருவரையும் கைது செய்து ஹான்ஸ் மற்றும் கூல் லிப்பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி