பட்டாசு ஆலை விபத்து: எடப்பாடி வலியுறுத்தல்

53பார்த்தது
பட்டாசு ஆலை விபத்து: எடப்பாடி வலியுறுத்தல்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே முத்துசாமிபுரத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் 9 பேர் உயிரிழந்தனர், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இது குறித்தான எக்ஸ் பதிவில், தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கும் உரிய நிவாரண தொகை உடனடியாக வழங்கும்படி, திமுக அரசை வலியுறுத்துவதுடன், தமிழ்நாடு முழுவதும் செயல்படும் பட்டாசு ஆலைகள் உரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றுகிறதா என்பதை இந்த அரசு உடனடியாக ஆய்வு செய்யவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி