கல்வி அலுவலருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

53பார்த்தது
கல்வி அலுவலருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
தேனி மாவட்டம் சீப்பாலக்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில், 2014-15 கல்வியாண்டு முதல், ஆங்கில வழிக் கல்வி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால், பள்ளி ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்களும் சேர்ந்து, அதை நிறுத்த முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சாமிநாதன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி மனுதாரரின் கோரிக்கை குறித்து ஒருவாரத்தில் முடிவெடுக்க மாவட்ட ஆட்சியருக்கும், முதன்மைக் கல்வி அலுவலருக்கும் உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி