மாஜி அமைச்சர் பேனரால் சர்ச்சை - அதிகாரி சஸ்பெண்ட்

71பார்த்தது
மாஜி அமைச்சர் பேனரால் சர்ச்சை - அதிகாரி சஸ்பெண்ட்
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில், மாநில அளவிலான தடகளப் போட்டி நடந்தது. இதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரை வரவேற்று அண்ணா விளையாட்டு அரங்கத்தில் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. இதனைப் பார்த்த திமுக அமைச்சர் நேரு கோபமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது திருச்சி மாவட்ட விளையாட்டு அதிகாரி வேல்முருகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விடுதி காப்பாளர் கண்ணன் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி