மோடி அமைச்சரவையில் 7 பெண்கள்

83பார்த்தது
மோடி அமைச்சரவையில் 7 பெண்கள்
நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நேற்று (ஜுன் 9) ஞாயிற்றுக்கிழமை இரவு பிரதமராக பதவியேற்றார். அவரது அமைச்சரவையில் ஏழு பெண்களுக்கு இடம் கிடைத்துள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சரவையில் பாஜக எம்.பி.,க்கள் நிர்மலா சீதாராமன், அன்னபூர்ணா தேவி, ஷோபா கரந்த்லாஜே, ரக்ஷா கட்சே, சாவித்ரி தாக்கூர், நிமுபென் பம்பானியா மற்றும் அப்னாதல் கட்சி எம்.பி., அனுப்ரியா படேல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். முந்தைய அமைச்சரவையில் மொத்தம் 10 பெண்கள் அமைச்சர்களாக இருந்தனர்.