பள்ளி வேனில் திடீர் தீ விபத்து - அலறியடித்த மாணவர்கள்

16690பார்த்தது
பள்ளி வேனில் திடீர் தீ விபத்து - அலறியடித்த மாணவர்கள்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள நடுக்குப்பம் பகுதியில் இன்று (ஜூன் 10) தனியார் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு அப்பள்ளி வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், வேனில் இருந்த மாணவர்கள் உடனடியாக இறக்கி விடப்பட்டனர். இதனால் மாணவர்கள் உயிர் தப்பினர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்துள்ளனர். இதற்கிடையே சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி