மேகாலயாவில் இன்று லேசான நிலநடுக்கம்

68பார்த்தது
மேகாலயாவில் இன்று லேசான நிலநடுக்கம்
மேகாலயாவில் இன்று (ஜுன் 10) திங்கள்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. மேற்கு காசி மலைப்பகுதியில் அதிகாலை 2.23 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் அல்லது பொருட்சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை. இது தொடர்பான முழு விவரங்கள் இன்னும் வரவில்லை.

நேற்று (ஜுன் 09) முன்தினம் இரவு ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டதில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி