ஒடிசாவின் புதிய முதல்வராகிறார் சுரேஷ் பூஜாரி?

79பார்த்தது
ஒடிசாவின் புதிய முதல்வராகிறார் சுரேஷ் பூஜாரி?
ஒடிசாவின் புதிய முதலமைச்சராக பாஜக எம்.எல்.ஏ., சுரேஷ் பூஜாரி பதவியேற்பார் என, தெரிகிறது. முதலமைச்சர் பதவிக்கு பாஜக தலைவர்கள் பலர் போட்டி போட்டு வருகின்றனர். இந்த நிலையில் சுரேஷ் பூஜாரியை கட்சி தலைமை டெல்லிக்கு அழைத்துள்ளது. இதன் மூலம் அவருக்கு முதலமைச்சர் பதவி கிடைக்கும் என்ற பேச்சுக்கள் தீவிரமாக உள்ளது. அவருடன் முன்னாள் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஜம்மு காஷ்மீர் முன்னாள் துணை நிலை ஆளுநர் கிரிஷ் சந்திரா, எம்.பி., பிரதாப் சாரங்கி ஆகியோரும் முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி