மொத்த மேற்கு மண்டலமும் திமுகவிடம் இருக்கிறது - அமைச்சர் முத்துசாமி

52பார்த்தது
மொத்த மேற்கு மண்டலமும் திமுகவிடம் இருக்கிறது - அமைச்சர் முத்துசாமி
'மேற்கு மண்டலம்.. மேற்கு மண்டலம்..' என பல பேர் பேசிக்கொண்டிருந்தார்கள், ஆனால் இன்று மொத்த மேற்கு மண்டலமும் திமுக கையில்தான் இருக்கிறது என்பதை கோவை மக்கள் நிரூபித்துள்ளனர். அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். கோவையில் வருகிற ஜுன் 14ஆம் தேதி நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழாவுக்கான அரங்கம் அமைக்கும் பணிக்கு இன்று (ஜுன் 9) அமைச்சர் முத்துசாமி அடிக்கல் நாட்டினார். பின்னர் கோவை கொடிசியா வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவின் முப்பெரும் விழாவை கோவையில் நடத்த வேண்டும் என்பது முதலமைச்சரின் விருப்பம் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி