சிறையில் மோதல்.! இரு கைதிகள் பலி

71பார்த்தது
சிறையில் மோதல்.! இரு கைதிகள் பலி
பஞ்சாப் மாநிலம் சங்ரூர் சிறையில் வெள்ளிக்கிழமை இரவு கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு கைதிகள் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த மோதலில் காயமடைந்த இரு கைதிகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் மேல் சிகிச்சைக்காக பாட்டியாலாவுக்கு மாற்றப்பட்டனர். ஆனால் எதற்காக இந்த மோதல் நடந்தது என்று தெரியவில்லை. இந்த சம்பவம் தொடர்பான முழு தகவல் இன்னும் வரவில்லை.

தொடர்புடைய செய்தி