கம்யூனிஸ்ட் தலைவர்கள் சுயநலவாதிகள் என திமுக எம்பி ஆ.ராசா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆ.ராசா, "கம்யூனிஸத்தில் கோளாறு இல்லை, கம்யூனிஸம் செம்மையானது. ஆனால், கம்யூனிஸத் தத்துவத்தை எடுத்து வந்த தலைவர்கள் நீர்த்து போன காரணத்தினால், சுயநலவாதிகளாக மாறிவிட்ட காரணத்தினால் கொள்கை நீர்த்துப் போய் விட்டது. கொள்கை தோற்றுவிட்டது" என்று கூறியுள்ளார். இதற்கு திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.