சென்னையில் அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. இதற்காக மாநகராட்சி நிர்வாகம் வழங்கிய கால அவகாசம் நேற்றுடன் (ஆக.25) முடிவடைந்தது. இந்த நிலையில், இன்று (ஆக.26) முதல் விதிமீறல் விளம்பர பதாகைகளை மாநகராட்சி பணியாளர்களே அகற்றும் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், விதிமீறிய கட்டட உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.