ரமலான் மாதம் தொடக்கம்: டிடிவி தினகரன் வாழ்த்து

66பார்த்தது
ரமலான் மாதம் தொடக்கம்: டிடிவி தினகரன் வாழ்த்து
இறை உணர்வோடு உடலையும், உள்ளத்தையும் தூய்மைப்படுத்தி, எல்லோரிடத்திலும் அன்பு பாராட்டி ஏழை, எளியோரின் ஏழ்மையை போக்கிடும் வகையில் புனித ரமலான் மாதத்தில் நோன்பை தொடங்கியிருக்கும் இஸ்லாமிய சகோதர, சகோதர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மேலும், மனிதகுலத்தின் வழிகாட்டி இறைதூதர் நபிகள் நாயகம் அவர்கள் போதித்த அன்பு, கருணை, ஈகை, மனிதநேயம் போன்ற நற்பண்புகளை பின்பற்றும் இஸ்லாமிய பெருமக்களின் எண்ணங்கள் அனைத்தும் இப்புனித ரமலான் மாதத்தில் நிறைவேறட்டும் என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி