சென்னை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவர், அப்பகுதியில் உள்ள கார் ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் பயிற்சிக்குச் சேர்ந்துள்ளார். அவருக்கு திருவேற்காட்டையைச் சேர்ந்த செல்வம் (37) என்பவர் கார் ஓட்டும் பயிற்சி கொடுத்து வந்துள்ளார். பயிற்சி அளிக்கும்போது செல்வம், கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்த நிலையில் அண்ணாநகர் மகளிர் போலீசார் செல்வத்தை கைது செய்தனர்.