கல்லூரி மாணவி ஆணவக்கொலை.. அண்ணன் பகீர் வாக்குமூலம்

59பார்த்தது
திருப்பூர்: பல்லடம் அருகே வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்த தங்கையை, அவரது அண்ணனே அடித்து ஆணவக்கொலை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வித்யா (22) என்ற இளம்பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது காதலரான வெண்மணி போலீசில் புகாரளித்தார். தொடர்ந்து வித்யாவின் உடல் நேற்று(ஏப்.2) தோண்டியெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதனிடையே போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், வித்யாவை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்றதாக அவரது அண்ணன் சரவணன் ஒப்புக்கொண்டுள்ளார்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி