தந்தை, அக்காவுடன் டூவீலரில் சென்ற 9 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்தவர்கள் மாணிக்கம் - பூஞ்சோலை தம்பதி. நேற்று இரவு மாணிக்கம் தனது மகள் ரஞ்சிதா, மகன் ராஜீவுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது XL திடீரென தீப்பிடித்தது. இதில் தந்தை, மகள் கீழே விழுந்தனர். ராஜீவ் (9) வாகனத்திலேயே சிக்கி பலத்த தீக்காயமடைந்து, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.