பரபரப்பான சூழலில், வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் இன்று (ஏப். 02) தாக்கல் செய்யப்படுகிறது. இதன்மீது, 8 மணி நேரம் விவாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த மசோதா இஸ்லாமியர்களின் நலனுக்கு எதிரானது என எதிர்க்கட்சிகளும், இஸ்லாமிய அமைப்புகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 44 திருத்தங்களுடன் வக்ஃப் வாரிய மசோதாவை விவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.