கோவையை சேர்ந்தவர் கே. ஆர். சங்கர். இந்து மக்கள் கட்சி நிர்வாகி. இவருக்கு சொந்தமான ஆம்புலன்சை டிரைவர் சௌந்தர்ராஜன் என்பவர் கோவை அரசு ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தம் அருகில் நிறுத்தி இருந்தார். நேற்று ஆம்புலன்ஸ் சாவியை மறந்து டிரைவர் இருக்கையில் வைத்துவிட்டு சௌந்தர்ராஜன் ஓய்வெடுக்க சென்று விட்டார்.
அதன் பிறகு திரும்பி வந்து பார்த்தபோது அந்த இடத்தில் ஆம்புலன்ஸ் இல்லை. மர்ம நபர் திருடி சென்று விட்டார். இது குறித்து கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து ஆம்புலன்ஸ் திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.