மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை தடாகம், மாங்கரை, பன்னிமடை கணுவாய், சோமையனூர் போன்ற பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், நேற்று இரவு கணுவாய் அடுத்த நர்சரி பகுதியில் சுமார் ஐந்து அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று சாலையைக் கடந்து சென்றது. இந்த அரிய நிகழ்வை கண்ட வாகன ஓட்டிகள், தங்களது செல்போன்களில் வீடியோ பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வனவிலங்கு வாழிடங்கள் அழிக்கப்படுவதால் இதுபோன்ற நிகழ்வுகள் அதிகரித்து வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.