ஆனைமலை: மர்மமான முறையில் தரைமட்டமான கட்டுமானம்!

66பார்த்தது
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கேரள வனப்பகுதியில் தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பரம்பிக்குளம் அணையில் 28 அடி நீளம், 11 அடி அகலத்தில் ஜெனரேட்டர் அறை கட்டுமானம் நடந்தது. கான்கிரீட் கம்பிகள் பொருத்தப்பட்டு மேல் தளம் வரை கட்டப்பட்ட கட்டிடம் திடீரென இடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது.
இது குறித்து உதவி பொறியாளர் தியாகராஜன் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து தகவல்களை தர மறுத்துள்ளார்.
அடர்ந்த வனத்தின் நடுவே கட்டப்பட்ட கட்டிடத்திற்கு உரிய அனுமதி உள்ளதா? ஒப்பந்ததாரர்கள் யார்? எவ்வளவு மதிப்பீட்டில் ஒப்பந்தம் போடப்பட்டது? என கேள்விகள் எழுந்துள்ளது. மேலும் மேல் அதிகாரிகளுக்கு தெரியாமல் கட்டிடம் எழுப்பப்பட்டதா? கேரள அதிகாரிகள் இடித்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் தமிழக அதிகாரிகள் இடித்தார்களா? என மர்மம் நீடிக்கிறது.
அதிர்வுகளை ஏற்படுத்தும் ஜெனரேட்டர் அமைக்க வலுவான அடித்தளம் இல்லாததால் கட்டிடம் தரைமட்டமாக்கப்பட்டதா? ஆளுயர கட்டிடம் கட்டப்பட்ட பின்பு இடிக்கப்பட்டதால் மக்கள் வரிப்பணம் வீணாகிறதா? என பல சந்தேகங்கள் எழுந்துள்ளது.
பரம்பிக்குளம் அணைப்பகுதியில் கட்டுமான கட்டிடங்களில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும் இது குறித்து அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி