வ உ சி பூங்கா கடமான்கள் சிறுவாணி வனப்பகுதியில் விடுவிப்பு

51பார்த்தது
கோவை வ. உ. சி வன உயிரியல் பூங்காவின் கடமான்கள் சிறுவாணி வனப்பகுதியில் விடுவிப்பு - துள்ளி ஓடும் அழகிய காட்சிகள்.
கோவையில் உள்ள வ. உ. சி வன உயிரியல் பூங்கா அங்கீகரிக்கப்பட்ட உயிரியல் பூங்கா அந்தஸ்து மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டது. இதனை அடுத்து, இங்கு பராமரிக்கப்படும் வன உயிரினங்களை வனப் பகுதியில் விடுவிக்க வேண்டும் என சென்னை முதன்மை வனப் பாதுகாவலர், தலைமை வன உயிரினக் காப்பாளர் ஆணை பிறப்பித்தனர்.
வ உ சி வன உயிரியல் பூங்கா இயக்குனர், வனத்துறை அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் முன்னிலையில்
இன்று காலை 8 மணி அளவில் 5 கட மான்களை பிரத்தியேக கூண்டு வாகனத்தில் ஏற்றப்பட்டு சிறுவாணி மலை அடிவாரம் பில்டர் ஹவுஸ் சராகம் வனப் பகுதியில் மதியம் 12. 00 மணி அளவில் விடுவிக்கப்பட்டது.
விடுவிக்கப்பட்ட கட மான்கள் தீவன உட்கொள்ளுதல், நீர் அருந்துதல் மற்றும் அதன் ஆரோக்கியத்தினை தொடர்ந்து கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி