கோவை அருகே வேடப்பட்டி அய்யாவு நகரைச் சேர்ந்தவர் விஷ்ணுபிரசாத் (வயது 33). இவர் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு கடந்த 29ம் தேதி பெங்களூரு சென்றார். இந்நிலையில், அவரது வீட்டில் வேலை செய்யும் பெண் செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் கீழே சிதறி கிடந்தன. உடனடியாக விஷ்ணுபிரசாத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 35 பவுன் நகை திருடு போனது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 17 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.