வானதி சீனிவாசன் எம் எல் ஏ பேட்டி

62பார்த்தது
திமுகவினருக்கு 40 எம். பிகளை கொடுத்த மக்களுக்கு, பரிசாக மின் கட்டண உயர்வை கொடுத்திருக்கிறார்கள். இதனால் சிறு , குறு தொழில்நிறுவனங்கள் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள் எனவும் மக்களை பாதிக்கின்ற மின் கட்டண உயர்வை தமிழக அரசு மறு பரீசிலினை செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் தமிழக அரசு தான் இந்தியாவிலே அதிகம் கடன் வாங்கிய அரசு ஆனாலும் பல மடங்கு வரி உயர்வு இங்கு தான் உள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

தமிழகத்தில் தொடர் படுகொலை என்பது சட்டம் , ஒழுங்கு சீர்கெட்டு கிடப்பதை காட்டுவதாகவும் அரசியல் கட்சியினருக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என சுட்டிகாட்டிய அவர் தமிழக அமைதி பூங்காவாக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

காவிரி விவாகரத்தில் மு. க. ஸ்டாலின் சொன்னா கர்நாடக அரசு கேட்காதா.
என கேள்வி எழுப்பிய வானதி சீனிவாசன் , இந்தியா கூட்டணியில் அதிக எம். பிகளை வைத்துள்ள திமுக, காவிரி விவாகரத்தில் காங்கிரஸ் அரசுடன் பேச வேண்டியது தானே எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
கூட்டணி தர்மம் என்பது மக்களின் உரிமை பாதுகாப்பதும் தான் எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி