கோவை பேரூர் அருள்மிகு பச்சை நாயகி, பட்டீஸ்வரர் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா வருகின்ற 10-ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு முளைப்பாரி திருவீதி உலா பேரூராதீனம் குரு மகா சன்னிதானம் திருப்பெருந்திரு சாந்தலிங்கம் மருதாசல அடிகளார் தலைமையில் நேற்று ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக திருக்கைலாய வாத்தியம் முழக்கத்துடன் ஊர்வலமானது பேரூர் சாந்தலிங்க அடிகளாரின் மடத்தில் இருந்து தொடங்கி பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவிலில் முளைப்பாரி ஊர்வலமானது சென்று அடைந்தது, பின்னர் திருக்குட நன்னீராட்டுக்கு தயாராக உள்ள கோபுர கலசத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் கலசங்களை ஊர்வலமாக சென்று கோவிலில் வலம் வந்தனர். இதில் பக்தர்களும், பொதுமக்களும் பலர் கலந்து கொண்டனர்.