தலைநகர் டெல்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக அரியணை ஏறுகிறது. 3 முறை ஆட்சி செய்த ஆம் ஆத்மி கட்சி தோல்வி முகத்தில் உள்ளது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவையான 36 இடங்களை தாண்டி பாஜக 42 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆம் ஆத்மி கட்சியினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், கட்சி அலுவலகத்தை மூடியுள்ளனர். கட்சி அலுவலகத்திற்கு யாரும் வர வேண்டாம் என்று தலைமை அறிவுறுத்தியுள்ளது.