திருநெல்வேலி மேலகுளம் கிராமத்தில் ராஜஸ்ரீ அஷ்டபுஜ தவயோக வன வராஹி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு மஞ்சள் அரைத்து வழிபட்டால் செல்வம் பெருகும், குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் தீரும், வழக்குகள் சாதகமாக முடியும் என நம்பப்படுகிறது. ஆஷாட நவராத்திரி திருவிழா இங்கு சிறப்பாக நடைபெறுகிறது. பெண்கள் அம்மியில் மஞ்சள் அரைத்து அம்மன் சன்னிதியில் வைத்து வழிபடுகின்றனர். அந்த மஞ்சளே பக்தர்களுக்கு பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது.