கோவை துடியலூர் அருகே உள்ள பெரியமாத்தம் பாளையத்தை சேர்ந்தவர் மோகன்(54). இவர் கடந்த 29ம் தேதி துடியலூர் - கணுவாய் ரோடு அப்பநாயக்கன்பாளையம் அருகே மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் நிலைதடுமாறி மொபட்டில் இருந்து தவறி விழுந்தார். இதில் தலை உள்ளிட்ட இடங்களில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று(செப்.8) பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.