சட்டவிரோத மது விற்பனை- கட்டிலில் சீல் வைத்த அதிகாரிகள்

72பார்த்தது
சட்டவிரோத மது விற்பனை- கட்டிலில் சீல் வைத்த அதிகாரிகள்
கோவை தொண்டாமுத்தூர் இல் இருந்து நரசிபுரம் செல்லும் சாலையில் அதிகாலைகளில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக தொடர்ந்து புகார்கள் இருந்தன.

இந்நிலையில் அப்பகுதியில் இன்று (செப் 22) திடீர் ஆய்வு செய்த காவல்துறையினர், சட்டவிரோதமாக அங்கு மது விற்பனை செய்தது தெரியவந்தது. உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், அங்கு செயல்பட்டு வந்த டாஸ்மாக் பார் முழுவதையும் தகர தகடுகளைக் கொண்டு முடி சீல் வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் அங்கு சென்ற பேரூர் தாசில்தார் டாஸ்மாக் பார் கடையின் ஊழியர்கள் படுத்து உறங்க வைத்திருந்த வயர் கட்டில் இரண்டை எடுத்து ஒன்றிணைத்து அதில் கம்பி கட்டி பூட்டி சீல் வைத்தார். இதை பார்த்த அங்கு மது குடிக்க வந்த மது பிரியர்கள் அதை பார்த்து அலட்சியமாக சிரித்து நகைச்சுவையாக பேசிக்கொண்டு செல்கின்றனர்.

உயர் அதிகாரிகள் தகர தகடுகளை முழுவதுமாக முடி சீல் வைக்க உத்தரவிட்டு இருந்த நிலையில். படுத்து உறங்கும் வயர் கட்டில் வைத்து மூடி சீல் வைத்த சம்பவம் அங்கு பிரியர்களிடையே நகைச்சுவையை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி