சவுக்கு சங்கரின் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் பேட்டி

75பார்த்தது
சவுக்கு சங்கர் மீது 90 நாட்களுக்கு முன்பு இரண்டாவது புதிய வழக்கு ஒன்று போட்டிருந்தார்கள். காவல் எடுத்து விசாரிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்கள். அதற்காகத்தான் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
ஆரம்பத்தில் இருந்து விசாரணைக்கு ஒத்துழைப்பு என தருவோம் கூறியிருந்தோம். தேவர் பற்றி தவறாக பேசியதாக அவர்கள் கூறுகிறார்கள். அந்த வீடியோவில் அவ்வாறு இல்லை. நான்கு நாட்களுக்கு முன்பு உயர்நீதிமன்றம் சவுக்கு சங்கர் மீது போட்டிருந்த குண்டாசை ரத்து செய்தது.

சங்கர் பேட்டியில் பொது அமைதிக்கு எந்த குந்தமும் விளைவிக்கப்படவில்லை என சில அறிவுறைகளை நீதிமன்றம் கூறி இருக்கிறது. அந்த வீடியோ வைத்து 17 வழக்குகள் போட்டார்கள், எங்கே வெளியில் வந்துவிடுவோரோ என அனைத்து வழக்குகளிலும் அவசரமாக கைது செய்யப்பட்டார்.

சவுக்கு சங்கரின் தாய் தாக்கல் செய்தமனு நாளை விசாரணைக்கு வருகிறது. அதனால் அவசரமாக கைது காண்பிக்க ஆரம்பித்தார்கள். உயர் நீதிமன்றத்தின் உத்தரவு இருக்கும்போது மதுரை மாற்றப்பட்டுள்ளார்

தொடர்புடைய செய்தி