கோவை: மருதமலை கும்பாபிஷேகம் திமுக மாநாடா- அண்ணாமலை பேட்டி!

57பார்த்தது
கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,
மருதமலையில் அண்மையில் நடைபெற்ற முருகப்பெருமானின் கும்பாபிஷேக விழா, திமுகவினரின் சொந்த நிகழ்ச்சியாக நடத்தப்பட்டதாக குற்றம் சாட்யுள்ளார். உண்மையான பக்தர்களை அனுமதிக்காமல், திமுக கரை வேட்டி கட்டியவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது.
நேற்று முன்தினம் மாலை முதல் பக்தர்கள் அனைவரும் படிக்கட்டின் வெளியே நிறுத்தப்பட்டதாகவும், படி ஏறக்கூட அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், அமைச்சர் சேகர்பாபுவின் மனைவியையும் குழந்தையையும் போலீசார் பாதுகாப்புடன் கோவிலுக்குள் அழைத்துச் சென்றதாக குற்றம்சாட்டியுள்ளனர். முருகப்பெருமானுக்கு சேவை செய்யும் கோவை மக்களுக்கு விபூதிகூட வழங்கப்படவில்லை என்றும், அறிவிக்கப்பட்ட 750 சிறப்பு தரிசன பாஸ்களும் திமுகவினருக்கே வழங்கப்பட்டதாகவும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது. மருதமலையின் முருகனை திமுகவினர் அவமானப்படுத்தி இருக்கிறார்கள். கும்பாபிஷேகம் எப்படி நடத்தப்பட வேண்டுமோ, அந்த முறையின்படி நடைபெறவில்லை. அறநிலையத்துறை அமைச்சரின் மனைவியும் மகனும் கோயம்புத்தூருக்கு சுற்றுலா வந்துவிட்டு, மருதமலை முருகனை எட்டிப் பார்த்ததைப் போல் வந்து சென்றுள்ளனர் என குற்றம் சாட்டியுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி