கோவை: மருதமலை திருக்கோவில் -1500 போலீசார் பாதுகாப்பு

67பார்த்தது
முருகப் பெருமானின் ஏழாம் படை வீடாகக் கருதப்படும் கோவை மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று கும்பாபிஷேக திருவிழா நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகர காவல் துறை மற்றும் மாவட்ட காவல் துறை சார்பில் 1, 500 போலீசார் மருதமலையில் குவிக்கப்பட்டுள்ளனர். திருக்கோவிலுக்குச் செல்லும் பாதையில் வாகனப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில், கும்பாபிஷேகத் திருவிழாவில் 750 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றனர். அடிவாரத்தில் இரண்டு இடங்களில் 2, 000 வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வாகனங்களும் அங்கு நிறுத்தப்பட்டு, பக்தர்கள் திருக்கோவில் படிக்கட்டுகள் மூலமாக மட்டுமே கோவிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி