தேனீ வளர்ப்பு பயிற்சி- வேளாண் பல்கலை தகவல்!

61பார்த்தது
தேனீ வளர்ப்பு பயிற்சி- வேளாண் பல்கலை தகவல்!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் தேனீ வளர்ப்பு பற்றிய ஒருநாள் பயிற்சி, செப்டம்பர் 2024 மாதத்திற்காக செப்டம்பர் 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் தேனீ இனங்களை கண்டுபிடித்து வளர்த்தல், பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை மற்றும் நிர்வாகம், தேனீக்கு உணவு தரும் பயிர்கள் மற்றும் மகரந்த சேர்க்கை மூலம் மகசூல் அதிகரிக்கும் பயிர்களின் விவரம், தேனைப் பிரித்தெடுத்தல், தேனீக்களின் இயற்கை எதிரிகள் மற்றும் நோய் நிர்வாகம் போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்படும்மேலும் விவரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் பூச்சியியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் என்ற முகவரியிலும், தொலைபேசி எண்: 0422-6611214, entomology@tnau. ac. in -லும் கொள்ளலாம்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி