vlb கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களின் வரவேற்பு விழா

83பார்த்தது
கோவைப்புதூர் பகுதியில் உள்ள, வி. எல். பி ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் இன்று மதியம் முதலாம் ஆண்டு மாணவர்களின் வரவேற்பு விழா நடைபெற்றது. இதில் ரூட்ஸ் நிறுவனத்தின் மனித வளத்துறை இயக்குனர் கவிதாசன் சிறப்பு விருந்தினராகப் பங்கு பெற்றார்.

நிகழ்ச்சியில், கல்லூரியின் கணினி துறைத் தலைவர் சாந்த் கோகுல் வரவேற்பு வழங்கினார். கல்லூரி முதல்வர் டாக்டர் பி. சதீஷ்குமார் தலைமையுரை வழங்கினார். அவர் தனது உரையில், கல்லூரியின் நடைமுறைகளையும், மாணவர்கள் பெற்றோர்களின் கனவுகளை நிறைவேற்றும் பிள்ளைகளாகவும், சமுதாயத்திற்குப் பொறுப்புள்ள குடிமகன்களாக கல்வியில் உயர்ந்து திகழ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து, ரூட்ஸ் நிறுவனத்தின் மனித வளத்துறை இயக்குனர் கவிதாசன் தனது சிறப்புரையில், இளம் வயதிலேயே மாணவர்கள் தங்களது எண்ணங்களைச் சீரமைக்க வேண்டும் என்றும் இலக்கை அடையும் வரை மனம் சோராது உழைக்க வேண்டும் என்றும், தடைகளை எல்லாம் தளராது எதிர்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
இந்த நிகழ்ச்சிக்கு, துணை முதல்வர் வாசுதேவன், தமிழ்த் துறைத் தலைவர் சுரேஷ், ப்யூச்சர் கேர் இயக்குனர் மனோஜ், அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியரகள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி